தேகுவே ஊரைச் சார்ந்த இடையர்களுள் ஒருவரான ஆமோஸ் என்பவர், யூதாவின் அரசனாகிய ஓசியா காலத்திலும், இஸ்ராயேலின் அரசனாகிய யோவாசின் மகன் யெரோபோவாமின் காலத்திலும், நில நடுக்கம் உண்டாவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் இஸ்ராயேலைக் குறித்துக் கண்ட காட்சியின் வார்த்தைகளாவன.
ஆண்டவர் கூறுவது இதுவே: "தமஸ்கு நகரம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; அவர்கள் கலகாத்தை இருப்புருளையில் வைத்து ஆட்டினார்கள்.
ஆண்டவர் கூறுவது இதுவே: "காசா பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்பை மாற்ற மாட்டோம்; அவர்கள் மக்களினம் முழுவதையுமே ஏதோமுக்கு அடிமைகளாகக் கூட்டிப் போனார்கள்.
ஆண்டவர் கூறுவது இதுவே: "தீர் நகரம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்பை மாற்றமாட்டோம்; அவர்கள் மக்களினம் முழுவதையுமே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள், சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைக்கவே இல்லை.
ஆண்டவர் கூறுவது இதுவே: "ஏதோம் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்றமாட்டோம்; இரக்கம் கொஞ்சமும் காட்டாமல் தன் சகோதரனையே வாளால் துன்புறுத்தினான்; தன் ஆத்திரத்தை அவன் அடக்கி வையாமல் என்றென்றும் தன் கோபத்தைக் காட்டி வந்தான்.
ஆண்டவர் கூறுவது இதுவே: "அம்மோன் மக்கள் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக, கலகாத்தின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழித்தனர்;
ஆதலால் ராபாவின் கோட்டை மதிலில் தீ மூட்டுவோம், அது அதனுடைய அரண்மனைகளை அழித்து விடும்; போர் தொடுக்கும் நாளிலே பேரிரைச்சலும், சூறாவளி நாளிலே கடும்புயலும் இருக்கும்!